மனநலம் பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் இருக்கும் ஏரிப்புறக்கரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஸ்ரீகாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது தற்கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.