Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் மெக்கானிக்கல் என்ஜினீயரான பரத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரமா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணியை கண்காணிக்கும் ரெயில் வந்த போது அதன் முன் பாய்ந்து பரத்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பரத்குமார் குடும்ப தகராறு காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று காவல் துறையினரின் தரப்பில் கூறப்படுகிறது.

Categories

Tech |