மொபைல் போன் கீழே விழுந்து உடைந்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்-கனிமொழி தம்பதியினர். 8 மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ரமீலா என்பவரின் மொபைலை கனிமொழி வாங்கி கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத சமயம் கையில் இருந்த மொபைல் போன் தவறி கீழே விழுந்ததில் உடைந்துவிட்டது.
மொபைல் உடைந்ததில் ரமீலாவுக்கும் கனிமொழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்தவர்கள் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் விஷம் குடித்து உள்ளனர். இதனைதொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி கொடுக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையில் ரமீலா பிழைத்துக் கொள்ள கனிமொழியின் நிலை மிகவும் கவலைக்கிடம் ஆனது. இதனை தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் கனிமொழி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.