திருமணமான 3 மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரம் தாங்காமல் கணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள கஸ்தூரி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு மனைவி சிவக்குமாரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் சிவக்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் தந்தை வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ள சமயம் விரக்தியில் இருந்த சிவக்குமார் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்று வீடு திரும்பிய சிவகுமாரின் தந்தை கதவைமகனை கூப்பிட்டு கதவை தட்டியுள்ளார். வெகுநேரம் கதவு திறக்காததால் சந்தேகம் கொண்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பொழுது தூக்கில் தொங்கிய மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை சிவக்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவகுமார் இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இச்சம்பவம் குறித்து அரச்சலூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.