நடிகர் நிவின் பாலியின் நண்பரான மேக்கப் மேன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் படமான “நேரம்” உள்ளிட்ட சில திரைப் படங்களிலும், மலையாளத்தில் “பிரேமம்” உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நிவின் பாலி. இவருக்கு பல ஆண்டுகளாக மேக்கப் மேனாக வேலை செய்தவர் ஷாபு புல்பள்ளி. இவரும், நடிகர் நிவின் பாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தது திரையுலகினர் பலருக்கும் தெரியும். இந்நிலையில் ஷாபு புல்பள்ளி கிறிஸ்மஸ் வருவதால் என்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் ஸ்டாரை கட்டுவதற்காக ஏறியுள்ளார்.
அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பரின் மரணம் குறித்து செய்தி அறிந்த நடிகர் நிவின் பாலி மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். மேலும் மலையாள நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். விசேஷ விஷயத்திற்காக செய்த வேலையில் இப்படி விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.