Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : ”தொழிலாளர்கள் திடீர் போராட்டம்” மும்பையில் உச்சகட்ட பரபரப்பு …!!

மும்பையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் 300 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரி சாலைகளில் இறங்கி, அங்கு இருக்கக்கூடிய பொருட்கள், கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே போல டெல்லியில் உள்ள சில முகாம்களில் தொழிலாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு மிக முக்கியமான கோரிக்கையை இருப்பது எங்களுக்கு உடனடியாக சாப்பிடுவதற்கு உணவு கொடுக்க வேண்டும். எங்களுக்கு உணவுகள் சரியாக கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வைத்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.

மேலும் எங்களது குடும்பம் எங்களது ஊர்களில் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன ? ஆச்சு என்று எங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே உடனடியாக எங்களை எங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே 20 நாட்களுக்கும் மேலாக இங்கேயே தங்கி விட்டோம். இனி மேல் எங்களால் நிச்சயமாக இருக்க முடியாது என்று சொல்லி போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக கல்கத்தா, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொழிலாளர்கள் நலனுக்காக இன்றைய தினம் 20க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனாவால் 3000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய சூழலில் இந்த போராட்டம் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.சமூக இடைவெளி இல்லாமல் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கூடியுள்ளதால் நோய் பரவலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |