மெக்சிகோவில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் காவல்துறையினர் அணிவகுப்பு ஒன்று மெக்சிகோ சிட்டி நகரில் உள்ள நீதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது வெடி பொருட்கள் மற்றும் கற்களை கொண்டு இளைஞர்கள் குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் காவல்துறையினர் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் வைத்தே அந்த காவல்துறையினருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நீதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சகம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமலேயே காவல்துறையினருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.