Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் சிறப்பு ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் கருநாகப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில்  நின்று செல்லும். அதன் பிறகு சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் பகுதிக்கு செல்லும் ரயில் டிசம்பர் 7, 9 மற்றும் 12 ஆகிய தகுதிகளில் கருநாகப்பள்ளி பகுதியில் நின்று செல்லும்.

இதனையடுத்துக் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் டிசம்பர் 8, 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கருநாகப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தமிழகம் வழியாக கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் டிசம்பர் 8, 12, 15 ஆகிய தேதிகளில் கருநாகப்பள்ளி ரயில்வே நிலையத்தில் நின்று செல்லும். மேலும் மறு மார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்லும் சிறப்பு ரயில் கருநாகப்பள்ளியில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |