மகர ராசி அன்பர்களே…!! இன்று ஆனந்தமான வாழ்க்கைக்கு இறைவனை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். விரயங்கள் கூடும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி செல்லும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணங்களில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடும். இன்று கடன் கொடுப்பதில், பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். எதிலும் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.
அவசரப்படாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபங்கள். இன்று பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் அமைதியாக இருக்கும். அதே போல சொந்த பந்தங்கள் இடம் பேசும்பொழுது நிதானம் அவசியம். உறவினர் உங்களுக்கு ஓரளவு உதவிகரமாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். கொடுக்கல் வாங்கலும் கொஞ்சம் தள்ளி வைப்பது நல்லது. பணம் பரிவர்த்தனையின் பொழுது கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.
யாருடைய பணத்திற்கும் பொறுப்பேற்காமல் இன்று இருப்பது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்