பிரித்தானிய விமானி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக 243 நாட்கள் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய இரண்டு மாதங்களுக்குள் மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள சர்ரே என்ற பகுதியை சேர்ந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானியான நிக்கோலஸ் சின்னூட்ட கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஹூஸ்டனுக்கு ஹீத்ரோவிலிருந்து சென்றிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருடைய உயிருக்கு ஆபத்து இருந்ததால் 13 மாதங்களுக்கு அவர் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சையில் இருந்துள்ளார்.
அதன் பிறகு கொரோனாவிலிருந்து மீண்ட பிரித்தானிய விமானி மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இருப்பினும் அவருக்கு மருத்துவ உதவி தொடர்ந்து தேவைப்பட்டு வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நிகோலஸ் மரணமடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. கொரோனாவிலிருந்து சுமார் 13 மாதங்களுக்கு பிறகு மீண்ட பிரித்தானிய விமானியின் திடீர் மறைவு அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.