புவியியல் ஆய்வு மையம் நேற்று காலை பெரு நாட்டின் உராஸ்குயில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.
புவியியல் ஆய்வு மையம் நேற்று காலை பெரு நாட்டின் உராஸ்குயில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 45 கிலோமீட்டர் ஆழத்தில் உராஸ்குயில் பகுதியிலிருந்து மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல் வடக்கு பெருவின் பகுதியில் நேற்று முன்தினம் 4.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.