Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர் காய்ச்சல்”…. அவரால சுத்தமா முடியல….. இருந்தாலும் நடிச்சாரு…. தளபதி விஜய் குறித்து பிரபல நடிகை சொன்ன நெகிழ்ச்சி தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு ஷாம், மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான தகவலை நடிகை குஷ்பூ தற்போது பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, சூட்டிங் ஸ்பாட்டில் சண்டை காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென விஜய்க்கு காய்ச்சல் வந்துவிட்டது. தனக்கு உடல்நலம் சரியில்லை என கூறி சூட்டிங்கை நிறுத்தினால் டெக்னீசியன்கள் மற்றும் மற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தினால் சண்டை காட்சிகள் முடியும் வரை விஜய் நடித்தார். நடிப்பின் மீது அவ்வளவு காதல் கொண்டவர் என்று கூறினார். மேலும் தளபதி விஜய் பற்றி நடிகர் குஷ்பூ சொன்ன தகவலை விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Categories

Tech |