Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றிய தீ… 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

பழைய பிளாஸ்ட் இரும்பு விற்பனை செய்யும் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள சங்கம்பட்டியில்  பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணபுரத்தில் சொந்தமான குடோன் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல வேலையை முடித்து விட்டி பாண்டி குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதிகாலை 4 மணியளவில் குடோனில் திடீரென தீப்பிடித்துள்ளது.

இதனைபார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் பாண்டிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியதால் தீ குடோனில் அனைத்து பகுதியிலும் பரவியுள்ளது. இதனால் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த நிலையில் கூடுதலாக 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்துள்ளனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த 25 லட்சம் மதிப்புள்ள இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து குடோன் உரிமையாளர் பாண்டி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |