திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் இக்பாலுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் கோழி இறைச்சி கடையும் மேல் தளத்தில் பழைய பொருட்களை போட்டு வைக்கும் குடோனும் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.