Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீர் தீ விபத்து.. 5 லட்சம் மதிப்புள்ள காலணி பஞ்சுகள் எரிந்து நாசம்…!!!

தனியார் தொழிற்சாலை பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலனி பஞ்சுகள் எரிந்து சேதமாகி உள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். இவர் தனியார் தொழிற்சாலைகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது பஞ்சு குடோன் ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில் உள்ளது. இந்த பஞ்சு குடோனில் திடீரென்று அதிக அளவில் கரும்புகை வெளிவந்ததை அக்கம்பக்கத்தினர் உடனடியாக பார்க்க, ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் 5 லட்சம்  மதிப்பு மிக்க காலணி பஞ்சுகள் சேதமடைந்ததாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பலகோணத்தில் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Categories

Tech |