Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் திடீர் தீ விபத்து… தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு படையினர்…!!

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது பற்றி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் முதல்கட்ட விசாரணையில் கூறுகையில், “காலை 7.30 மணியளவில் நடந்த இந்த தீ விபத்து, மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம். உடனே தகவல் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இந்த தீ விபத்தினால் சில மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |