Categories
உலக செய்திகள்

தரையிறங்கும் போது விமானத்தில் திடீர் தீ …! 163 பயணிகளின் கதி என்ன ?

ஜெர்மனியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது சக்கரத்தில் தீ பிடித்ததால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 

துருக்கியில் குறைந்த கட்டண விமான நிறுவனமான பிகாசஸ் ஏர்லைன்ஸ் சொந்தமான ஏர்பஸ் A 321 பயணிகள் விமானம் இஸ்தான்புல்லில் இருந்து 163 பயணிகளுடன் புறப்பட்டு  ஜெர்மனுக்கு சென்றது. ஜெர்மனியில்  தரையிறங்கும் போது விமானத்தின் டயர் ஒன்றில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக பயணிகள் அனைவரும் உடனடியாக அவசர பாதை(Emergency Exit)  வழியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் அதிஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விமான நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |