Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீரென பாய்ந்த ஓபிஎஸ்….. இபிஎஸ் கோட்டையில் பலத்த அடி….. அதிமுகவில் பெரும் பரபரப்பு…..!!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ்-ம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்கிறது. அதன்பிறகு கூடிய விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருப்பதால் அதில் எதிர் கட்சி துணைத் தலைவர் அந்தஸ்தை ஓபிஸ்-க்கு கொடுக்கக் கூடாது எனவும், அவருக்கு அதிமுகவினர் இருக்கையில் இடம் ஒதுக்க கூடாது எனவும் இபிஎஸ் சபாநாயகருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இதேபோன்று ஓபிஎஸ்-ம் நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும், என்னைக் கேட்காமல் யாருக்கும் எதிர்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை கொடுக்கக் கூடாது எனவும் சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இப்படி மாறி மாறி 2 பேரும் கடிதங்கள் அனுப்பி இருந்தாலும் சபாநாயகர் இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இபிஎஸ்-க்கு பெரிய பதிலடியாக ஓபிஎஸ் தற்போது அதிரடியான ஒரு செயலை செய்துள்ளார். அதாவது எடப்பாடியின் கோட்டையாக கருதப்படும் சேலம் மாவட்டம் சேலம் மாநகர் மற்றும் புறநகர் என 2 மாவட்டங்களாக செயல்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் தற்போது சேலம் மாவட்டத்தை மாநகர், புறநகர், மேற்கு, சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மத்திய மற்றும் சேலம் புறநகர் வடக்கு என 5 மாவட்டங்களாக பிரித்துள்ளார். அதன்பிறகு பிரிக்கப்பட்ட சேலம் மாவட்ட செயலாளர்களாக ராஜ்குமார், ஜெய்சங்கர், பெரியசாமி, எடப்பாடி ராஜேந்திரன் மற்றும் தினேஷ் ஆகியோரை நியமித்துள்ளார். மேலும் இபிஎஸ் கோட்டையாக கருதப்படும் சேலம் மாவட்டத்தில் ஓபிஎஸ் இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |