இங்கிலாந்தில் ஒரு கிராமத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென வானிலை மாற்றம் காரணமாக கல் மழை பெய்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Kibworth Beauchamp என்ற கிராமத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென வானிலை மாற்றத்தால் கல்மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் 5 சென்டிமீட்டர் அளவுள்ள பனிக்கட்டிகள் கார் மற்றும் கார் கண்ணாடிகள், கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவற்றின் மீது படபடவென வந்து மோதியதால் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் திடுக்கிட்டு எழுந்துள்ளனர்.
இதையடுத்து சுமார் 30 முதல் 45 நிமிடங்களுக்கு மழை பெய்துள்ளது. இந்த கல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும்பாலான சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் வெள்ளப்பெருக்கு காரணமாக முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் தங்கியிருந்தோர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.