நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கினர். இதையடுத்து ரயில் போக்குவரத்து தொடங்கியது. ஆனாலும் கொரோனா இன்னும் குறையவில்லை. ஒரு சில இடங்களில் கொரோனா இரண்டாவது அலை, புது வகைக் கொரோனா ஆகியவை பரவி வருகின்றது.
எனவே ரயில் நிலையங்களில் மக்கள் அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவும், அனாவசியப் பயணங்களைத் தவிர்ப்பதற்காகவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பிளாட்பாரத்தில் கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. குறைந்த தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிக கட்டணமும், பிளாட்பாரம் டிக்கெட்டின் விலையை ரூபாய் 10 இலிருந்து ரூபாய் 50 ஆகவும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.