Categories
இந்திய சினிமா சினிமா

“திடீர் தகவல்”KGF-2 படப்பிடிப்பு நிறுத்தம்… வருத்தத்தில் ரசிகர்கள்..!!

யாஷ் நடித்துவந்த கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அனைத்தும் இன்று அளவு வரை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Image result for kgf 2

பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து இப்படத்தை எடுக்க முயற்சி செய்தனர். இந்நிலையில் பாகுபலிக்கு கிடைத்த வரவேற்பை விட அதிக அளவிலான வரவேற்பு கேஜிஎப் சாப்டர் 2 படத்திற்கு கிடைத்துள்ளது. படப்பிடிப்பு நடைபெற்று வரும் வேளையில் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள் ஆரவாரம் அடைய படம் எப்போது வெளியாகும் என்று கொக்கரித்து கொண்டிருந்தனர்.

Image result for kgf 2

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் செட் அமைத்து சூட்டிங் நடைபெற்று வந்தது. அதில் செட் அமைப்பதற்காக மலையின் ஏராளமான பகுதிகளை சேதமடைய செய்துள்ளதாக படக்குழுவின் மீது அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேஜிஎப் சாப்டர் 2 படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளனர். இந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Categories

Tech |