Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு… பொதுமக்கள் அளித்த புகார்… எச்சரிக்கை விடுத்த அமைச்சர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் பத்திரப்பதிவு துறை அரசு தலைவர் சிவனருள், கூடுதல் பதிவுத்துறை தலைவர் நல்லசிவம், செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 1 1/2 மணி நேரம் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது பத்திரப்பதிவு அலுவலரிடம் எத்தனை டோக்கன் வரை பதிவு நடைபெற்றுள்ளது என அமைச்சர் கேட்டுள்ளார். அதற்கு அலுவலர் 20 டோக்கன் வரை பாத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது 8வது டோக்கன் வரை மட்டுமே பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பத்திரப்பதிவு முறையாக நடைபெறுவதில்லை என்றும், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் சார் பதிவாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகளை எச்சரித்துள்ளார். இதேபோல் பொதுமக்கள் புகார் அளித்தால் அந்தந்த அலுவலகங்களில் ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |