Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர் திருமணம் செய்த பிரபலம்…. தடபுடலாக மனைவியின் வளைகாப்பு…. திரைப் பிரபலங்கள் வாழ்த்து…!!

திடீர் திருமணம் செய்த பிரபலத்தின் மனைவியின் வளைகாப்பில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கி அதன்பின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு பிரபல சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு சில காரணங்களால் திருமணம் நின்றது.

இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கின் போது இவர் திடீரென்று மது என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திடீர் திருமணத்தில் எந்த பிரபலங்களும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

ஆகையால் மனைவியின் வளைகாப்பை சுரேஷ் தடபுடலாக பைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Categories

Tech |