பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகன்ட் சிங்கிள் என பாடல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை சரியாக 6 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் கோலாகல இசை வெளியீட்டு விழா தொடங்கியுள்ளது. ஆனால் ரசிகர்கள் மதியம் 2 மணிக்கே வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு மற்றும் பட குழுவினர் அனைவருமே வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்றுள்ளனர்.
இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரஞ்சிதமே பாடலை பாடிய மானசி மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மைக் திடீரென வேலை செய்யாமல் போனது. இதை கவனித்த விஜய் கொஞ்சம் கூட யோசிக்காமல் இருக்கையில் இருந்து எழுந்து சென்று மனசுக்கு வேறொரு மைக்கை கொடுத்தார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகர் விஜய்யை பலரும் பாராட்டி வருகிறார்கள்.