செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யாவும், செல்லம்மா என்ற தொடரில் நடித்து வரும் அர்னவ்வும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை திவ்யா மற்றும் அர்னவ் இடையே கடுமையான பிரச்சனைகள் நடைபெற்று வருவதால், இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர். நடிகை திவ்யா தன்னை அடித்து துன்புறுத்தி கருவை கலைக்க அர்னவ் திட்டமிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
ஆனால் அர்னவ் என்னுடைய மனைவி திவ்யா எனக்கு வேண்டும் என்றும், சிலரின் தூண்டுதலின் பேரில் தான் அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்றும் கூறினார். அதோடு நடிகை திவ்யா கருவை கலைப்பதற்கு திட்டமிட்டு தான் இப்படி ஒரு பழியை தன் மீது போட்டதாகவும் அர்னவ் கூறியிருந்தார். இந்த குற்றங்களுக்கான ஆதாரங்களையும் அர்னவ் மற்றும் திவ்யா இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் நடிகை திவ்யா தன்னுடைய கணவரான அர்னவ் மீது மகளிர் ஆணையம் மற்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருந்தார்.
அந்த புகாரின் படி போரூர் மகளிர் காவல் துறையினர் அர்னவ் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், அர்னவை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் அழைத்துள்ளனர். ஆனால் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படும் நிலையில், நாளை விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என காவல்துறையினர் அர்னவ்வுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் விசாரணைக்கு பயந்து நடிகர் அர்னவ் தற்போது தலைமறை வாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அர்னவ் நாளை நடைபெறும் விசாரணைக்கு ஆஜர் ஆவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.