தமிழகத்தில் உள்ள முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தீயணைப்பு துறை புதிய டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும், காவல்துறை பொது பிரிவு ஐஜியாக செந்தில்குமாரும், கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாக கயல்விழியும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக காவல்துறையின் தலைமை ஏடிஜிபி வெங்கட்ராமன் இனி கூடுதல் பொறுப்பாக காவல்துறை நிர்வாகப் பிரிவை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாக பிரபாகரனும், தஞ்சை மாவட்ட எஸ்பியாக முத்தரசியும், ஆவடி போக்குவரத்து துறை துணை ஆணையராக ஜெயலட்சுமியும், தமிழக காவல்துறை சட்ட ஒழுங்கு ஏஐஜியாக உமாவும், சிபிசிஐடி எஸ்பியாக ரவாளி பிரியாவும், உளவுத்துறை சிறப்பு பிரிவு எஸ்பியாக அருளரசும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர், தென்காசி மாவட்ட எஸ்பி செந்தில்குமார், நாமக்கல் மாவட்ட எஸ்பி கலைச் செல்வன், தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நேரத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.