மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை துனிஷா ஷர்மா (20). இவர் அலிபாபா தஸ்தான் இ காபூல் என்ற தொடரில் தற்போது நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகை துனிஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சக நடிகரான ஷீஜன் கான் என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் நடிகையின் மரணம் குறித்து போலீசார் கூறும்போது படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் நடிகை கழிவறையை விட்டு வெளியே வராததால் படக்குழு எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று கழிவறையை உடைத்து உள்ளே சென்ற போது நடிகை துனிஷா தூக்கில் பிணமாக தொங்கினார். இவருடைய தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை. அதன்பிறகு துனிஷாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சக நடிகரான ஷீஜன் கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவரை நாளை கோர்ட்டில் ஆஜர் படுத்த போகிறோம். மேலும் துனிஷாவின் மரணத்தை கொலை மற்றும் தற்கொலை என 2 கோணங்களில் விசாரிக்க போவதாக போலீசார் கூறியுள்ளனர்.