Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர், தளபதியின் திடீர் விசிட்” அனிரூத்துடன் பார்ட்டி… செம குஷியில் சாருக்கான்…. வைரலாகும் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தன்னுடைய முதல் படத்திலேயே மெகா ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதன் பிறகு தளபதி விஜய் உடன் சேர்ந்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இந்த படங்களை தொடர்ந்து பாலிவுட் சென்ற அட்லி தற்போது ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதன் பிறகு நடிகர் விஜய்யும் ஜவான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி விஜய் மற்றும் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று விசிட் அடித்தனர். இந்நிலையில் நடிகர் சாருக்கான் தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். அதன் பிறகு நயன்தாராவுடன் சேர்ந்து படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி, தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் உரையாடல், அட்லியும், பிரியாவும் அருமையான உணவை கொடுத்தது என 30 நாட்களும் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தது. நான் இப்போது சிக்கன் 65 தயார் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் ஷாருக்கானின் பதிவுகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |