பேரணியாக சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது திடீரென கூட்டத்தில் நுழைந்த இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
இந்த துப்பாக்கி சூட்டில் சதப் ஃபரூக் என்ற மாணவர் காயம் அடைந்தார். பின்னர் அந்த மாணவரை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட சிகிச்சைக்கு பின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த இளைஞர் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் தொடர்ந்து முகநூலில் நேரலையாக கருத்துகளை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. முன்னதாகவே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.