Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றிய தீ… “ரூ. 7 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசம்”… ராசிபுரத்தில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூட்டைகள் இருப்பு வைக்கும் இடத்தில் திடீரென்று தீ பற்றியதால் 7 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் நாசமாயின.

ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே அதிமுகவை சேர்ந்த நாமக்கல் முன்னாள் மக்களவை உறுப்பினர் சுந்தரம் என்பவருக்கு சொந்தமான மூட்டைகள் வைக்கும் இருப்பு இடம் ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும், இந்த  நிலையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென்று கிடங்கில் தீ பற்றி எரிந்தது. அப்பகுதியினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத்துறையினர் மட்டுமின்றி, அப்பகுதியை சுற்றியுள்ள சேலம், நாமக்கல் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. பின்னர் அனைவரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சியின் குடிநீர் வாகனங்களும் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்திற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. 15,000 விரலி மஞ்சள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 7 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |