ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நேற்று கர்நாடகத்தில் இருந்து பேருந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது அங்கு திடீரென கர்நாடக அரசு பேருந்து ஒன்று மாவட்டத்திற்குள் நுழைந்தது.
மாவட்டத்திற்குள் கர்நாடக பேருந்து வந்ததை கண்டு மக்கள் அனைவரும் பேருந்து இயங்கத் தொடங்கி விட்டதா? என்ற கோணத்தில் ஆச்சரியமாக பார்க்க தொடங்கினர். அதன்பின் இந்த செய்தி அம்மாவட்ட தாசில்தாருக்கு சென்றது. அதன்பின் அவர் வந்து கர்நாடக பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் இந்தப் பகுதிகளில் பேருந்து இயக்கக்கூடாது. அதனால் திரும்பி சென்று விடுங்கள் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.