Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீடிரென வெடித்த பேட்டரி… செல்போன் கடையில் பரபரப்பு…. ஆடிப்போன கஸ்டமர் …!!

சென்னையில்  செல்போன் கடை ஒன்றில் பழுது பார்த்துக் கொண்டிருந்த போன் பேட்டரி திடீரென்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை போரூரில் முஜிபுர் ரஹ்மான் என்பவர் செல்போன் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். நேற்று அவர் வாடிக்கையாளரின் செல்போனை பழுது பார்ப்பதற்காக செல்போன் பேட்டரியை தனியாக கழட்டி மேஜையில் வைத்து செல்போன் டிஸ்ப்ளே துடைப்பதற்காக பயன்படுத்தும் தின்னரை அதன்மேல் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த வாடிக்கையாளர் பேட்டரியை ஒரு ஸ்பேனரால் தொட்டவுடன் பேட்டரி திடீரென வெடித்து தீ பிடித்ததில் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடினர். அதன்பின் எரிந்துகொண்டிருந்த பேட்டியை கடையின் உரிமையாளர் மேஜையில் இருந்து கீழே தள்ளி தண்ணீர் ஊற்றி அணைத்தார். கடை உரிமையாளரின் துரித செயலால் பெரிய தீ பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

Categories

Tech |