அமெரிக்காவில் வரலாற்றுப் புகழ் மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று இரண்டு தினங்களுக்கு முன் தீக்கிரையானது .
அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெஸ்பேலியா என்ற இடத்தில் 1895 ஆம் ஆண்டு மரப்பலகையினால் இந்த தேவாலயமானது கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த தேவாலயம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திடீரென தீப்பற்றியது. பின்னர், வளாகம் முழுவதும் தீப்பற்றிய நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் .
இதனால் , சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தேவாலயம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்துக்கான காரணம் அறிய தேவாலயம் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக , தேவாலயத்தில் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட இருந்தவேளையில் , கத்தோலிக்க தேவாலயமானது திடீரென தீக்கிரையானது கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.