சுதா கோங்காரா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக பலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் நல்ல வசூலை ஈட்டிய நிலையில் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. சிம்பு நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற சுதா கொங்காரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகின்றது.
சூரரை போற்றி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த சுதா கொங்கரா அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றார். இதையடுத்து சிம்பு நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கின்றார். இந்த படம் தனது கனவு திரைப்படம் எனவும் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக அமையும் என சுதா கொங்கரா கூறியுள்ளார்.