Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்ய விட்டல…. பொதுமக்கள் தர்ணா போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவகளிடமிருந்து மீட்டு தருமாறு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொத்தூர் ஊராட்சி அமைந்திருக்கிறது. இந்த ஊராட்சியில் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்த காரணத்தினால் தற்போது அதே பகுதியில் வசிக்கும் வேறு சிலர் அதை ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்று விவசாயம் செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் இறந்து போகும் நபர்களை அங்கே அடக்கம் செய்ய விடாத காரணத்தினால் ஊர் பொதுமக்கள் சுடுகாடு இடத்தை மீட்டு தரவேண்டும் என அவர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த தாசில்தார் பூங்கொடி தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் சம்பவ இடத்திற்கு தாசில்தார் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதற்குப் பிறகு மூன்று மணி நேரமாக பொதுமக்கள் அலுவலகத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு அமர்ந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தாசில்தாரிடம் பட்டாவை ரத்து செய்து இறந்தவர்கள் உடலை புதைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அலுவலகத்தில் வாசலில் முற்றுகையிட்டுள்ளனர். இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் தங்களின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூறி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதன் காரணத்தினால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |