Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இந்த விலையை கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெட்ரோல்,டீசலின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமலில் இருக்கின்ற நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வகையில் பெட்ரோல், டீசல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு உடனடியாக விலையை குறைக்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி எதிரில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் அகமது பாட்சா தலைமை தாங்கினார்.

அப்போது சுடுகாட்டில் தகன மேடை அமைப்பது போல ஸ்கூட்டர் மீது விறகுக் கட்டைகளை அடுக்கி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி நூதன போராட்டத்தில் வாலிபர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் நகர செயலாளர் ஹலில் ரகுமான் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோன்று பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்து முத்துப்பேட்டை உள்ள தெற்கு கிளையிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில்  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் தேனசினா ஜெகபர் அலி தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் அபுபக்கர்சித்திக், மாவட்ட தலைவர் தப்ரேஆலம் பாதுசா, நகர துணைத் தலைவர் சவுக்கத் அலி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |