Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் கிரேஸி பாடலுக்கு ரிகர்சல் செய்யும் தனுஷ்… வெளியான புகைப்படங்கள்…!!!

கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ள தனுஷ் ஒரு பாடலுக்கு நடன ஒத்திகை பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்காக நடிகர் தனுஷ் நடன ஒத்திகை பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது .

இந்த புகைப்படத்தை டான்ஸ் மாஸ்டர் ஜானி  தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்தப்பாடல் தனுஷின்  சூப்பர் கிரேஸி பாடலாக இருக்கும் என்றும் அவருடைய மற்றொரு ட்ரெண்டிங் பாடலாக இது இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார் . விவேக் எழுதியுள்ள இந்த பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . நடிகர் தனுஷின் ரவுடி பேபி பாடல் அளவுக்கு இந்த பாடல் ஹிட் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

Categories

Tech |