மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அரிட்டாபட்டி கிராம ஊராட்சி.
இயற்கை வளங்களும் பழமை வாய்ந்த புராதன கல்வெட்டுகளும் குடவரைக் கோவில்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு குடவரைக் கோயிலுக்கு செல்லும் வழியில் விளைநிலங்களை ஓட்டினர் போல் நூலகமும், சுகாதார மையமும் செயல்பட்டு வருகின்றன. இவற்றைச் சுற்றிலும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கழிவுநீர் மழைநீர் தேங்கி கிராம மக்கள் நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலேயே இடம் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கன்வாடி மையம் கட்ட தேர்வு செய்யப்பட்டு உள்ள இடத்தின் அருகிலேயே ஆபத்தான நிலையில் இரண்டு கிணறுகள், ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளதால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி கிராம பொதுமக்கள் அந்த இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டிடம் அமைய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாற்று இடத்தை தேர்வு செய்து அங்கு அங்கன்வாடி மையம் அமைத்து தருமாறு அரசுக்கு பொதுமக்கள் நிகழ்ச்சி மூலம் கோரிக்கை வைத்தனர்.