பொங்கல் கரும்பு விதைக்கும் பணியை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்புக்கு தனி மவுசு உண்டு. அது ஏனென்றால் வளமான மண், காவிரி நீர் மற்றும் பாரம்பரிய விவசாய முறைகளை விவசாயிகள் கடைப்பிடிப்பதே ஆகும். அதன்படி பொங்கல் கரும்பு பயிரிடுவதற்கு சித்திரை மாதம் உகந்தது என்பதால் திருக்காட்டுப்பள்ளி விவசாயிகள் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி விதைக் கரும்பு கரணைகளை பாரம்பரிய விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வயல்களை உழுது பண்படுத்தி பார் பிடித்து அதில் விதைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணியை கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் திருக்காட்டுப்பள்ளி விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர் என வேளாண் துறை தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் அதற்கு குறையாமல் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.