Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரொம்ப சுவையா இருக்கும்… எதுவும் செய்ய முடியல… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் கரும்பு ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் இழப்பீடு வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள காமலாபுரம், சக்கரை செட்டியபட்டி, டேனிஷ்பேட்டை உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் வெல்லம் தயாரிக்க தேவையான கரும்புகளை சேலம் மாவட்டம் வெல்லம் வியாபாரிகளிடமிருந்து ஆலை உரிமையாளர்கள் கொள்முதல் செய்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் வெல்லம் ஈரோடு மற்றும் சேலம் லீ பஜார் மார்க்கெட்டில் விற்பனை செய்வது வழக்கம்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சுவையாக இருப்பதால் மார்க்கெட்டில் நல்ல விலை போகும். இந்நிலையில் ஊரடங்கால் வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரங்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் கரும்பு அறுவடை செய்யாமல் பாதிக்கப்பட்டதால் கரும்பு ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் கருதி தொழிலாளர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |