Categories
கொரோனா மாநில செய்திகள்

சுகாதாரத்துறை மிக கவனமாக இருக்க வேண்டும்… கிரண்பேடி அறிவுறுத்தல்…!!!

சுகாதாரத்துறை கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கவர்னர் கிரண்பேடி கொரோனா குறித்து சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், காரைக்கால் திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி திருவிழாக்கள் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அடுத்து வரும் 48 நாட்களும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர் நலன் கருதி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு ஆரோக்கியமாக திரும்ப வேண்டும். புதுவை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடாது. மற்றும் கோவில் பணியில் உள்ளவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். எந்த நேரத்திலும் சுகாதாரத்துறை, கொரோனா தொற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
[3:04 pm, 28/12/2020] Gayu: கொரோனாவுக்கு எதிர்ப்பு… சுகாதாரத்துறை தயார்!!! கிரண்பேடி வலியுறுத்தல்….

Categories

Tech |