கர்நாடக மாநிலங்களூருவில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பானது நடந்தது. குக்கர் குண்டு வெடிப்புக்கு முக்கியமாக காரணமாக இருந்த முகமது ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை NIA விசாரணைக்கு கர்நாடகா அரசு பரிந்துரை செய்துள்ளது. NIA விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். யாருடைய தலைமையில் குண்டுவெடிப்பு நடந்தது ? எந்த பயங்கரவாத அமைப்பு இதற்க்கு துணை போனது ? என்பதெல்லாம் பல கட்ட விசாரணையில் தான் தெரிய வரும்.
எனவே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு விரிவான விசாரணை நடத்துவதற்கு எதுவாக NIA என்ற மத்திய புலனாய்வு அமைப்பிற்கு கர்நாடக அரசு மாற்றியுள்ளது. எனவே இந்த விசாரணை அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.