தற்கொலைகளை தடுப்பதை தீவிரமாக முன்னெடுத்து செயல்பட வேண்டும் என எய்ம்ஸ் கல்வி நிறுவனத்துக்கு மருத்துவர்கள், பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
எய்ம்ஸ் நிறுவனத்தில் இளங்கலை மாணவர்களிடையே சமீபத்தில் நடந்த தற்கொலைகள் பற்றி, மருத்துவ மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் எய்ம்ஸ் கல்வி நிறுவன இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க விரைவாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மாணவர்கள் நல்ல முறையில் படிப்பை முடித்து திரும்புவதற்கான, ஒரு சூழலை வழங்க கூட்டாக சிந்தித்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. சென்ற 2 மாதங்களில், எய்ம்ஸ் மருத்துவமனையில் கற்கும் 2 மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் ஏற்பட்டாலோ, அந்த எண்ணத்தை மாற்றிக்்கொள்ள கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050