Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எனக்கு நெஞ்சு வலிக்குது… அதிர்ச்சியடைந்த மகள்… விசாரணை நடத்தும் போலீஸ்…!!

திடீரென்று சத்துணவு அமைப்பாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனியம்மாள். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் பழனியம்மாள் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகிறார்.இந்நிலையில் பழனியம்மாள் நேற்று காலை தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே தன்னை பார்க்க வருமாறு தெரிவித்துள்ளார்.

உடனே பழனியம்மாளின் மகள் வெங்கடாபுரத்திற்கு வந்து பார்த்தபோது பழனியம்மாள் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து பழனியம்மாளின் மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனியம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |