குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை கிராமத்தில் விவசாய ஆண்டிஅய்யா என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 18ஆம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்துவிட்டு தனது வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவர் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.