கடன் தொல்லையால் தாய் மகன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் சாந்தி என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் இருந்தார். சாந்தி தனது கணவரை விட்டுப் பிரிந்து தனது மகனுடன் தனியே வசித்து வந்துள்ளார். மேலும் இவர் ஏலச்சீட்டு நடத்தி கடன் தொல்லைக்கு ஆளாகி உள்ளார்.
இதனால் சாந்தியும் அவரது மகனும் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனது வீட்டில் வெவ்வேறு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதன்பின் வெகு நேரமாகியும் சாந்தி வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக தொங்கியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.