Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆகி 4 மாதம்தான் ஆச்சு…. வாலிபரின் சோக முடிவு…. கண்ணீரில் மனைவி….!!

திருமணமான நான்கு மாதங்களில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பகுதியில் பரமசிவம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாசுதேவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாசுதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |