Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமேல் குடிக்க கூடாது…. கண்டித்த பெற்றோர்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் தும்மக்குண்டு கிராமத்தில் வசித்து வருபவர் அய்யர். இவருடைய மகன் பழனி என்பவர் பால் வண்டியில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அவர் மனவேதனை அடைந்து தனது வீட்டின் அருகில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியை பிடித்துள்ளார்.

இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Categories

Tech |