Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆசை பட்ட பெண்ணை… திருமணம் செய்ய முடியாததால்… வாலிபர் எடுத்த சோக முடிவு…!!

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் இருக்கும் செம்மநத்தத்தை சார்ந்தவர் கௌரி செட்டி. இவருடைய மகன் நடராஜன் என்பவர் பாலக்கோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். நடராஜன் அவருடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய எண்ணி பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டும் கொடுக்க மறுத்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனால் மனமுடைந்த நடராஜன் நேற்று வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |