கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் கிராமத்தில் நாடிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுப்பிரமணியன் என்பவர் விவசாயிகளாக உள்ளார். இவர் அப்பகுதிகளில் பலரிடம் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் கடன் கொடுத்தவர்கள் திரும்பி கேட்டதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
அவர் விரக்தியில் விஷம் வாங்கிக்கொண்டு அருகிலுள்ள ஏரிக்கரைக்கு சென்று அதை குடித்துவிட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.